எந்த ஒரு வழிபாட்டு முறையையும் எதிர்க்கவில்லை என்றும் அனைத்து வழிபாட்டு முறைகளும் புனிதமானவை என்று ஏற்றுக்கொள்வதாகவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் கியான்வாபி மசூதி விவகாரம் பற்றி குறிப்பிட்டபோது, கடந்தகால வரலாறுகளுக்காக தற்போது யார் மீதும் பழி சுமத்தக் கூடாது என்றார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தனது பலத்தை வைத்து மிரட்டுவதாகவும் இந்தியா பலமான நாடாக இருந்திருந்தால் போரை தடுத்து நிறுத்தியிருக்கும் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவித்தார்